தமிழகத்தில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை எனும் நிலையை உருவாக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை எனும் நிலையை உருவாக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை என்கிற நிலைமை உருவாக்க வேண்டும் என்று திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

குறிப்பாக தமிழக அளவிலும் குறிப்பாக கோவை,ஈரோடு திருப்பூர் மாவட்டங்களில் உணவு வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்  என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாளை முதல்வர் கோவை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தொண்டர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 

கோவை வருகையின்போது வரவேற்புகளை தவிர்க்க வேண்டும். எனக்கு வரவேற்பு பதாகைகள் வைப்பதை விட பசியைப் போக்கும் உன்னத பணியில் ஈடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பின்றி கொரோனா தொடர் சங்கிலியை துண்டித்து விட முடியாது.

கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்