மின்சார தொகையினை ஊரடங்கு காலத்தில் ரத்து செய்க: கமல் வலியுறுத்தல்.

மின்சார தொகையினை ஊரடங்கு காலத்தில் ரத்து செய்க: கமல் வலியுறுத்தல்.

தமிழகத்தின் தொழில்துறையைப் பாதுகாக்க நிலையான மின்சார தொகையினை ஊரடங்கு காலத்தில் ரத்து செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், அந்த அறிக்கையில், "ஊழியர்களை அழைத்துவர பேருந்து வேன் வசதி செய்வது எல்லாராலும் முடியாக காரியம். இதற்கான மாற்று வழிகளுக்கு அரசே உதவ வேண்டும். சோப் மாற்றும் சானிடைசர் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபடுப்பவர்களை அத்தியாவசியப் பொருட்கள் தயாரிப்பவர்களாக அங்கேரிக்க வேண்டும். ஆக்ஸிஜன் போன்ற பிற அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்திக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் கடன் வட்டி விகிநத்தில் மானியம் வழங்க வேண்டும். 

சர்பாசி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது தொழில்துறையின் நீண்ட நாள் கோரிக்கை. இந்த இக்கட்டான நேரத்திலாவது இந்தச் சட்டத்தை ரத்து செய்யும்படி மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். வாராக்கடன் வசூல் விதிமுறைகளிலிருந்து சிறுநறு நடுத்தர தொழில்களுக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் விலக்கு அளிப்பதுடன் தொழில் நிறுளவங்களுக்கு அனைத்துவகை கடன்களின் ஈஎம்.ஐ தவனைகளைச் செலுந்தும் சுமையிலிருந்தும் ரொண்டிற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். வட்டித் தொகை செலுத்தாததால் நிவால் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது. உற்பதது பாதிக்கப்பட்டுள்ள இந்த நெருக்கடியான காலத்தில் கடன் தொகைகளை செறுத்துமாறு அவசரப்படுத்தக் கூடாது என தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.51%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்