யாகம் நடத்தினால் கொரோனா மூன்றாம் அலை இந்தியாவை தாக்காது - பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு

யாகம் நடத்தினால் கொரோனா மூன்றாம் அலை இந்தியாவை தாக்காது - பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு

மத்திய பிரதேச மாநிலத்தின் கலாச்சாரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர்  யாகங்கள் நடத்தினால் இந்தியாவை கொரோனா வைரஸின் மூன்றாம் அலை தீண்டவே தீண்டாது என கூறியுள்ளார்.இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.

பல்வேறு மருத்துவம் கட்டமைப்புகள் கொண்ட நாடுகளே கொரோனாவை கட்டுக்கு கொண்டு வர முடியாமல் தவித்து வரும் சுழலில் இந்த அமைச்சரின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.இதனையடுத்து தற்போது மத்திய பிரதேச மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது.இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் புதிய கொரோனா மருத்துவமனை ஒன்றை திறந்து வைக்க மத்திய பிரதேச மாநிலத்தின் கலாச்சாரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர் அவர்கள் சென்றுள்ளார்.

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த உஷா தாக்கூர் , சுற்றுச்சூழல் சுத்தம் அடைவதற்கு நான்கு நாட்களுக்கு யாகங்கள் நடத்துங்கள் என்றும், இது யாக்ஞ சிகிச்சை எனவும், இதைத்தான் ஆதி காலங்களில் நமது மூதாதையர்கள் பெரும் தொற்றுக்களை ஒழிப்பதற்கான செய்தார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் யாகங்கள் நடத்தினால் கொரோனாவின் மூன்றாம் அலை நம் நாட்டை தீண்டவே தீண்டாது எனவும் தெரிவித்துள்ள அவர், கொரோனாவின் மூன்றாம் அலைக்கு மத்திய பிரதேச அரசு முழு தயாரிப்பில் உள்ளதாகவும், நம் கொரோனாவை வெற்றிகரமாக வெல்லுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.51%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்