7 பேர் விடுதலை… ஆலோசனையில் ஈடுப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

7 பேர் விடுதலை… ஆலோசனையில் ஈடுப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7பேர் விடுதலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதியுடன் ஆலோசனையில் இன்று ஈடுபட்டார். 

ஏற்கெனவே இது தொடர்பான பல வழக்குகள் உச்ச நீதிமன்றம் மற்றும் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து தமிழக அரசு ஒரு நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இறுதியாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் வீட்டில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக தலைமை அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். 

ஏற்கெனவே வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இதுகுறித்து முதல்வரிடம் வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போது இந்த ஆலோசனை நடைபெற்றது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்