தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்!

தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் ஷங்கர் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. திமுக மட்டுமே 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் பதவியேற்றார். இவருடன் சேர்ந்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில்,இயக்குனர் ஷங்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் "எங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு காப்பீட்டு தொகை மற்றும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் ஆகியவற்றை பாராட்டுகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்