தமிழகத்திற்கு சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி - முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்வீட்.

தமிழகத்திற்கு சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி - முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்வீட்.

தமிழக முதல்வராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின்  தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் 23வது முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மே 7) பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, சென்னை தலைமை செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இந்நிலையில் தன்னை முதல்வராக சேவை செய்திட வாய்ப்பலித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

அந்தப் பதிவில், ’'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்! காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் - திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!” என்று பதிவிட்டுள்ளார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்