தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்...

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதன்மை செயலாளராக உதயசந்திரன் ஐஏஎஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. தமிழகத்தின் முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனே அதிரடியான 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அதற்கான அரசாணையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ் சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்