பெண்களுக்கு ஹீரோவான முதல்வர் மு.க.ஸ்டாலின்: இனிமேல் நகரப்பேருந்துகளில் இலவச பயணம்

பெண்களுக்கு ஹீரோவான  முதல்வர் மு.க.ஸ்டாலின்: இனிமேல்  நகரப்பேருந்துகளில் இலவச பயணம்

நாளை முதல் அனைத்து மகளிருக்கும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.

சென்னை தலைமை செயலகம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெண்கள் தினமும் அன்றாட தேவைகளுக்காக பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.இன்றைய காலகட்டத்தில் பேருந்து நமக்கு ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது.இன்னும் சில பெண்கள் பேருந்துகளில் செல்வதற்கு கூட  பணம் இல்லாமல் நடந்து செல்லும் அவலம் கிராமங்களில் நடந்து வருகின்றனர்.

இந்த அறிவிப்பு பல பெண்களில் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் விதமாக அமையும் என்பதில் எந்த வித ஐயமில்லை.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்