கேப்டனை சந்தித்த உதயநிதி… வைரலாகும் புகைப்படம்..!

கேப்டனை சந்தித்த உதயநிதி… வைரலாகும் புகைப்படம்..!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை திமுக இளைஞரணி தலைவரும், சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். 

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி, ஹீரோவாக  ரசிகர்களிடையே பிரபலமான உதயநிதி ஸ்டாலின், பின்னர் திமுக இளைஞரணி செயலாளராக அரசியல் வட்டத்தில் அறியப்பட்டார்.

இந்நிலையில் நடந்த இந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக நின்ற உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். 

இதனைத் தொடர்ந்து அவருக்கு திரைத்துறையை சார்ந்தவர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த தேர்தலில் திமுக வென்றுள்ளதை அடுத்து மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். 

இந்நிலையில் எம்.எல்.ஏவும், மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக, சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் வைரலாகி வருகின்றன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்