வாக்களித்த, வாக்களிக்காத அனைவருக்கும் நன்றி - அமைச்சர் ஜெயக்குமார்

வாக்களித்த, வாக்களிக்காத அனைவருக்கும் நன்றி - அமைச்சர் ஜெயக்குமார்

வாக்களித்த வாக்களிக்காத ராயபுரம் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து திமுக கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. திமுக மட்டும் 125 தொகுதிகளில்வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கவுள்ளது.இதில் திமுக பெருபான்மையான இடங்களை பிடித்து வெற்றியை பதிவு செய்தது.இந்த நிலையில் சென்னை இராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் 19,082 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி, 49,543 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். உங்களுடனேயே பயணிப்பேன். வாக்களித்த வாக்களிக்காத ராயபுரம் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. எப்போதும் போலவே என் மக்கள் பணி தொடரும். நான் எப்போதும் உங்களில் ஒருவன் தான் உங்களுக்கான ஒருவன் தான்.' என்று பதிவிட்டுள்ளார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்