கொரோனாவைத் தடுக்க முழு ஊரடங்குதான் தீர்வு: ராகுல் காந்தி ட்வீட்

கொரோனாவைத் தடுக்க முழு ஊரடங்குதான் தீர்வு: ராகுல் காந்தி ட்வீட்

கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு மட்டுமே தீர்வு என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.மத்திய,மாநில அரசுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.ஒரு சில மாநிலங்களில் கொரோனா பரவலை தடுக்க ,முழு நேர ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பதிவில் அவர் பதிவிட்டுள்ளதாவது, கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு.நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை அறிவித்து விட்டு ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்