தமிழக அமைச்சரவையில் இடம் இருக்கா? உதயநிதி ஸ்டாலின் பளீச் பதில்

தமிழக அமைச்சரவையில் இடம் இருக்கா? உதயநிதி ஸ்டாலின் பளீச் பதில்

தமிழக அமைச்சரவையில் இடம் உள்ளதா என்பது குறித்து திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி கூட்டணி 125க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி அதிகமான பலத்துடன் ஆட்சி அமைக்கவிருக்கிறது. தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் விரைவில் பதவியேற்கவிருக்கிறார். அமைச்சர்களை தேர்தெடுக்கும் முக்கிய திமுக கட்சி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றிப்பெற்ற உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''இது தலைவருக்கான வெற்றி, கலைஞருக்கான வெற்றி. தொகுதி மக்கள் நிறைய கோரிக்கை கொடுத்திருக்கிறார்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்'' என்று கூறினார்.

மேலும் அமைச்சரவையில் உங்களுக்கு இடம் இடம் பெறுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு , மே 7-ம் தேதி தெரிந்துவிடும் என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்