’ப்ரெண்ட்ஸ் இத ஃபாலோ செய்யாதீர்கள்’… எச்சரித்த பிரபல நடிகர்..!

’ப்ரெண்ட்ஸ் இத ஃபாலோ செய்யாதீர்கள்’… எச்சரித்த பிரபல நடிகர்..!

திரை நட்சத்திரங்களின் பெயர்களில் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்குவதில் என்ன சுவாரஸியம் இருக்கிறது என தெரியவில்லை. வாரத்துக்கு இரண்டு பேர் இந்த வேலையை செய்கிறார்கள்.

இந்நிலையில் யோகி பாபு பெயரில் ட்விட்டரில் புதிதாக கணக்கு தொடங்கியிருக்கிறார்கள். யார் என்று தெரியவில்லை. ஒருசிலர் அதை ஃபாலோ செய்யவும் விஷயம் யோகி பாபு காதுக்கு எட்டியிருக்கிறது. உடனே அவர், "ப்ரெண்ட்ஸ் இது போலி ஐடி, ஃபாலோ செய்யாதீர்கள்" என எச்சரித்துள்ளார்.

அந்த போலி கணக்கில், கமல்ஹாசன் பிரசாரம் செய்யும் படத்தை வெளியிட்டு, "டஃப் காம்படீசன் சார்" என்று கமெண்டும் போட்டிருந்தார்கள். கமலுக்கே கமெண்ட் போட்டவர்கள் நாளை மோடிக்கு சவால்விட மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? அதனால், உஷாராக, அது போலி என்று ஆரம்பத்திலேயே எச்சரித்திருக்கிறார் யோகி பாபு.

இத்தனைக்கும், அவர் பெயரில் ஏற்கனவே ஒரு கணக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்