புதுச்சேரியில் காங்கிரஸ் தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன் - நாராயணசாமி அதிரடி

புதுச்சேரியில் காங்கிரஸ் தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன் - நாராயணசாமி அதிரடி

புதுச்சேரியில் காங்கிரஸ் தோல்விக்கு முழு பொறுப்பேற்பதாக முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு,புதுச்சேரி,மேற்கு வங்கம்,கேரளா,அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்வு விறுவிறுப்பாக நடைப்பெற்று முடிந்தது.இந்த நிலையில் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் புதுச்சேரி முதல்வராக வரும் 7ம் தேதி பதவியேற்கிறார் ரங்கசாமி.

இந்நிலையில் புதுச்சேரியில்  தேர்தல் முடிவுகள் குறித்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட அறிக்கையில், புதுவை மாநிலத்தில் 2021 ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு, முன்னாள் முதலமைச்சராக பணியாற்றிய நான் முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன்.புதுச்சேரி மாநில மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன் என்று, நாராயணசாமி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்