நீண்ட இழுபறிக்குப் பிறகு பார்டரில் பாஸ் செய்தார் திமுக பொதுச்செயலாளர்!

நீண்ட இழுபறிக்குப் பிறகு பார்டரில் பாஸ் செய்தார் திமுக பொதுச்செயலாளர்!

காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நீண்ட இழுபறிக்குப் பிறகு தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட சற்று குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

 துரைமுருகனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வி.ராமு 794 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.ஆரம்பம் முதலே காட்பாடியில் இழுபறி நீடித்து வந்த நிலையில், துரைமுருகன் 52,526 வாக்குகள் பெற்றார்.

அதிமுக வேட்பாளரான ராமு 51,087 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 794 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றது அவரது தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 இந்த சட்டமன்ற  தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக அனைவராலும் உற்றுநோக்க பட்டது. காரணம், மக்கள் நீதி மையம், அமமுக மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மிகப்பெரிய தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்த நிலையில் திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது.

 இந்த நிலையில், திமுக சார்பில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெறும் 758 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக திமுகவில் துரைமுருகனின் பின்னடைவு அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.காலையில் இருந்து பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் தற்போது துரைமுருகன் பார்டரில் பாஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்