தமிழக சட்டசபை தேர்தலில் டெபாசீட்டை இழந்த பிரேமலதா விஜயகாந்த்!

தமிழக சட்டசபை தேர்தலில் டெபாசீட்டை இழந்த பிரேமலதா விஜயகாந்த்!

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் ஜெ.கார்த்திகேயன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை துவங்கியதிலிருந்து பிரேமலதா விஜயகாந்த்  3 ஆவது இடத்தில் தான்  இருந்தார்.இறுதியில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.விருத்தாசலத்தில் மொத்தம் 1,94,723 ஓட்டுகள் பதிவாகியிருந்தன. பதிவான ஓட்டுகளில், 6 ஒரு பங்கு ஓட்டு பெற்றால் டெபாசிட் பெற்றதாக அறிவிக்கப்படுவார். ஆனால் அவர் 25,908 ஓட்டுகள் மட்டுமே பெற்றதால் அங்கு டெபாசிட் இழந்தார் என்பது குறிப்பிடத்ததக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்