ஆதரவளித்த தமிழக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

ஆதரவளித்த தமிழக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து ட்விட்டரில் தமிழில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.இந்நிலையில் பல்வேறு தலைவர்களும் தங்களின் வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறி கொள்கின்றனர்.இந்நிலையில் பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

அந்த டிவிட்டர் பதிவில் 'தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மாநில நலனுக்காகவும் பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்றவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியளிக்கிறேன். கடினமாகஉழைத்த நமது தொண்டர்களைப் பாராட்டுகிறேன்.' என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்