ஆடம்பரம் இல்லாமல் பதவியேற்பு விழா : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

ஆடம்பரம் இல்லாமல் பதவியேற்பு விழா : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பதவியேற்பு விழா மிக எளிமையாக ஆளுநர் மாளிகையில் நடத்தப்படும் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலின், லயோலா கல்லூரியில் வெற்றி சான்று பெற்ற பின்னர் கருணாநிதி நினைவிடம் சென்று வெற்றி சான்றிதழை சமர்ப்பித்து கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செய்தார்.பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என ஏற்றுக் கொள்வதாகவும், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றபோவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த 10 ஆண்டுகளில், தமிழகம் பாதாளத்திற்கு சென்றுள்ளதை புரிந்து திமுக கூட்டணிக்கு பொதுமக்கள் ஆதரவளித்துள்ளனர் என்றும்  திமுகவுக்கு வாக்களிக்க தவறியவர்களுக்கும் சேர்ந்தே தனது தலைமையிலான அரசு பணியாற்றுவோம் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்