தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: சென்னையில் தொடர்ந்து திமுக ஆதிக்கம்.,!

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: சென்னையில் தொடர்ந்து திமுக ஆதிக்கம்.,!

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டுள்ளனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணிக்கு தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தற்போதைய நிலவரப்படி 1401 இடங்களில் திமுக கூட்டணியினரும், 91 இடங்களில் அதிமுக கூட்டணியினரும் முன்னிலை பெற்றுள்ளனர். 

இந்த நிலையில் சென்னை மண்டலத்தில் உள்ள 15 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இதன்படி, சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சியே முன்னிலை வகிக்கிறது. துறைமுகம் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் முன்னிலை வகித்து வருகிறார்.

திமுக கூட்டணி: 15

ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க. நகர், எழும்பூர், ராயபுரம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி

பா.ஜ.க. கூட்டணி: 1

துறைமுகம் தொகுதி

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்