திடீர் திடீரென வைஃபை வசதி உருவாகிறது: தேர்தல் ஆணையத்தில் கமல் குற்றச்சாட்டு.

திடீர் திடீரென வைஃபை வசதி உருவாகிறது: தேர்தல் ஆணையத்தில் கமல் குற்றச்சாட்டு.

 வாக்கு எண்ணும் மையங்களில் குளறுபடிகள் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை, ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன், "சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயலிழந்து விடுவதும், மர்ம நபர்கள் நள்ளிரவில் வாக்கு எண்ணும் வளாகங்களுக்குள் நுழைவதும், திடீர் திடீரென வைஃபை வசதி வளாகங்களுக்கு உள்ளும், வெளியும் உருவாவதும், லேப்டாப்புடன் மர்மநபர்கள் ஸ்ட்ராங் ரூம் அருகே நடமாடுவதும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்புகிறது. விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கவேண்டும். தேர்தல் முறையாக நடத்தப்பட்டு முடிவுகள் நேர்மையாக அறிவிக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையை வாக்காளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் உருவாக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஏற்கனவே, 30 விழுக்காடு வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில்லை. வாக்குகளும், வாக்கு எண்ணிக்கையில்  இதுபோன்ற மர்மங்களும் சந்தேகங்களும் நீடித்தால் பொது மக்களின் ஜனநாயக பங்களிப்பு இன்னும் குறையும் அபாயம் உண்டு. அது ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடியும் வாக்காளர் பட்டியல் குளறுபடிகளையும் புகாராக அளித்திருக்கிறோம். இது முதல் கட்டம் தான். இன்னும் நிறைய புகார்கள் எங்களுக்கே வந்த வண்ணம் உள்ளன. அவைகளை திரட்டி கொண்டு வந்து அவர்கள் பார்வைக்கு வைக்க இருக்கிறோம். இது ஜனநாயகத்தை காப்பாற்றும் ஒரு முயற்சி எங்களை காப்பாற்றி கொள்ளும் முயற்சி மட்டுமல்ல" என தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்