கொரோனாவின் இரண்டாவது அலை... இரவு 8 மணிக்கு பிரதமர் அவசர ஆலோசனை!

 கொரோனாவின் இரண்டாவது அலை... இரவு 8 மணிக்கு பிரதமர் அவசர ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், கொரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி குறித்தும் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசு கொரோனா பரவலை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகளை மமேற்கொண்டு வருகிறது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி, கொரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி குறித்தும் இன்று இரவு 8 மணிக்கு அவசரகால ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் பல்வேறு அமைச்சகங்களின் உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளதாக பல மாநிலங்கள் கூறிவரும் நிலையில், இந்த ஆலோசனை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் முக்கியமான தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்