’வாக்குச்சாவடிக்கு போனாலும் எங்களால வாக்கு போட முடியலிங்க’.. தவிப்பில் துறைமுகம் தொகுதி மக்கள்..!

’வாக்குச்சாவடிக்கு போனாலும் எங்களால வாக்கு போட முடியலிங்க’.. தவிப்பில் துறைமுகம் தொகுதி மக்கள்..!

சென்னை துறைமுகம் தொகுதியில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லாததால் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று(ஏப்ரல் 6) நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுகவின் அசைக்க முடியாத  கோட்டையாக திகழும் சென்னை துறைமுகம் தொகுதியில், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதால் வாக்களிக்க முடியாமல் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றனர். 

இதுகுறித்து விசாரித்தபோது, அவர்களின் பெயர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வெளியிடப்படுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற போதும், வாக்குச்சாவடியில் உள்ள பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதால் தங்களால் வாக்களிக்க முடியவில்லை என்று வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் அவர்கள், வீடு தேடி எப்போதும் வாக்காளர் சரிப்பார்ப்பு மற்றும் பூத் சிலிப் வழங்குதல் போன்றவை தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பே தொடங்கிவிடும். ஆனால், இம்முறை தேர்தலுக்கு ஒரு நாள் மட்டுமே இருந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை என்பதை அறிந்தும் தங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றும், யாரிடம் சென்று புகார் அளிப்பது என்று தெரியவில்லை என்றும், தங்களுடைய ஜனநாயக கடமையை செய்ய இயலவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும் சிலர், வாக்காளர் சரிப்பார்ப்புக்கும் வாக்குச் சீட்டு கொடுப்பதற்கும் யாரும் வரவில்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும் சிலர், திட்டமிட்டே பலரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.  

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள பட்டியல்..

வாக்குச்சாவடியில் உள்ள பட்டியல்.