வாக்கிற்குக் காசு வாங்கக் கூடாது என்று மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்! சீமான் திட்டவட்டம்...

வாக்கிற்குக் காசு வாங்கக் கூடாது என்று மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்! சீமான் திட்டவட்டம்...

தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு கோலாகலமாக தொடங்கிய நிலையில், சென்னை வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வாக்களித்தார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மக்களும் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் திமுக கட்சித்தலைவர் ஸ்டாலின், தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் திரைப் பிரபலங்கள் ஆகியோர் இன்று வாக்களித்தனர்.

இந்நிலையில் சீமான், வரிசையில் நின்று வாக்களித்தார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் ‘பணநாயகம் இருக்கும் வரை ஜனநாயகம் கேள்விக்குறியாகவே இருக்கும் என்றும்  தேர்தல் முறையில் மாற்றம் தேவை. காந்தி சொல்வதை பின்பற்றும் விதமாக மாற்றத்தை நம்மிலிருந்து தொடங்க வேண்டும் என்றும் கூறினார்.மேலும் வாக்கு அளிப்பதற்கு  காசு வாங்கக் கூடாது என்று மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்