’ஒரு வாக்குக்கு 200 கொடு போதும்’…வைரலான வீடியோவால் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு..!

’ஒரு வாக்குக்கு 200 கொடு போதும்’…வைரலான வீடியோவால் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு..!

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக தேர்தல் களம் கிளைமாக்ஸை எட்டவிருக்கும் நிலையில், திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற திமுக வேட்பாளர் கே.என்.நேரு, தன்னுடைய அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் பேசிய காட்சிகள் செல்ஃபோனில் எடுக்கப்பட்டு, வைரலாக பரவி வருகிறது. அதில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய் கொடுப்பதாக திமுக பிரமுகர் ஒருவர் நேருவிடம் கூறுகிறார். அதற்கு நேரு, “அவர்கள் கொடுத்தால் கொடுத்துவிட்டு போகட்டும். 500 ரூபாய் முழுமையாகச் சென்று வாக்காளர்களைச் சேராது. அதனால் 200 கொடு போதும்” என்கிறார். அதிமுக 500 கொடுப்பதால், நாமும் 500 கொடுப்போம் என நம்ம ஆளுங்க சொல்றாங்க என்று சொல்லும் தொண்டரை, கடுமையான வார்த்தைகளால் சாடுகிறார் கே.என்.நேரு. 

இந்நிலையில் கே.என்.நேரு ஆபாசமாகவும், மிரட்டும் வகையிலும் பேசியதாக புகார் எழுந்திருக்கின்றன. 

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரில் கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே கொளத்தூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என அதிமுக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கே.என் நேருமீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்