சர்ச்சை பேச்சு: ஆ.ராசா, தயாநிதி மாறன், திண்டுக்கல் லியோனி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு!

சர்ச்சை பேச்சு: ஆ.ராசா, தயாநிதி மாறன், திண்டுக்கல் லியோனி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு!

தேர்தல் பிரசாரத்தின் போது அவதூறாக பேசியதாக திமுக எம்.பிக்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திமுக எம்.பி.,யான ஆ.ராசா முதல்வரின் தாயாரை ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சயைானது.அதற்காக ராசா மன்னிப்பும் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.பெண்கள் குறித்து அவதூறாக பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளா் ஆ.ராசா, பட்டிமன்றப் பேச்சாளா் திண்டுக்கல் லியோனி ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்தும்,கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்றது.இந்நிலையில் தமிழ்நாடு முதல் இந்திய வரை தலைவர்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.இந்த செய்தி பெண்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

தற்போது பெண்களை ஆபாசமாக திட்டுதல், கலகம் செய்ய தூண்டி விடுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுகவின் மீது தொடர்ந்து இவ்வாறு குற்றச்சாட்டுகள் வருவது தேர்தலில் எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்