ஜெயலலிதா வேதா இல்ல வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்!

ஜெயலலிதா வேதா இல்ல வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்!

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தொடர்பாக தீபக், தீபா தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம்.

வேதா நிலையத்தின் நிலம் கையகப்படுத்தியது, இழப்பீடு நிர்ணயித்ததற்கு எதிரான வழக்கில் விசாரணை முடிவு பெற்றது.இந்நிலையில் ஜெ.தீபா, ஜெ.தீபக் மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து. ஜெயலலிதா வாரிசான தன்னிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று மனுதாரர் ஜெ.தீபக் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்புதலே அளிக்காத போது ரூ.67.90 கோடி இழப்பீடு நிர்ணயித்தது சட்டவிரோதம் என்று  ஜெ.தீபாதன்னுடைய  வாதத்தை முன்வைத்தார்.ஆனால் அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்ட பிறகே நிலம் கையகப்படுத்தப்பட்டது என்று  தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.மேலும் பல்வேறு பிரச்சனைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது, தீபா, தீபக் ஆகியோர் அவருக்கு உறுதுணையாக இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்