பாஜக வேட்பாளர் காரில் கைப்பற்றப்பட்ட வாக்கு இயந்திரங்கள்: தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்ன.?

பாஜக வேட்பாளர் காரில் கைப்பற்றப்பட்ட வாக்கு இயந்திரங்கள்: தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்ன.?

அசாமில் 2-ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நடைபெற்றது. அப்போது பதர்கண்டி தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்து மின்னணு இயந்திரங்கள் பாஜக வேட்பாளர் காரில் கொண்டு சென்றதாக சர்ச்சை எழுந்தது. வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய பாஜக முயற்சி செய்து இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக நான்கு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இதுகுறித்த விரிவான விளக்கத்தையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில். "வாக்கு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் கொண்டு செல்லும்போது பெருமழையால் வாகனங்கள் நகர முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது தங்களது வாகனம் நகர முடியாத நிலையில் அவ்வழியே சென்ற வேறு ஒரு வாகனத்தின் மூலம் வாக்கு இயந்திரம் பாதுகாப்பு மையத்திற்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டது. அந்த சமயத்தில் சிலர் வாகனத்தை வழிமறித்து தாக்கியது வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக முழக்கம் எழுப்பினர். அதன் பிறகுதான் தாங்கள் சென்றது பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரின் கார் என்பது தெரியவந்தது" என தெரிவித்துள்ளது. எனினும் வாக்கு இயந்திரத்தை முறையாக கையாளாக குற்றச்சாட்டில் தொடர்புடைய வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாக்கு இயந்திரம் சேதம் அடையாவிட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்