2 நாட்களில் 5000 கிமீ தூரம் பயணம்… பிரதமரின் அசத்தல் பிரசாரம்..!

2 நாட்களில் 5000 கிமீ தூரம் பயணம்… பிரதமரின் அசத்தல் பிரசாரம்..!

5 மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முன்னணி தேர்தல் பிரசாரகராக இருக்கும் பிரதமர் மோடி, 2 நாட்களில்(48 மணி நேரத்தில்) 4 மாநிலங்களில் சுமார் 5000 கிமீ தூரம் பயணித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நடைபெறும் 5 மாநில சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரையில் அசாமில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாஜகவை பொறுத்தவரை மிக முக்கிய தேர்தல் களம் என்றால் அது மேற்குவங்கம் தான். ஆளும் திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்தி முதல் முறையாக அங்கு ஆட்சியை கைப்பற்றும் முயற்சிகளில் தீவிரம் காட்டியுள்ளது. இதே போல பாண்டிச்சேரியிலும் பாஜக அதன் கூட்டணி ஆட்சியை கொண்டுவர முயன்றுள்ளது. தமிழகம், கேரளாவில் தனது இருப்பை காட்டிக்கொள்ள முயற்சித்து வருகிறது. 

இந்நிலையில், பாஜகவின் ஸ்டார் பிரசாரகரான பிரதமர் மோடி சற்றும் ஓய்வில்லாமல் 48 மணி நேரத்தில் 5000 கிமீ பயணித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நேற்றைய தினம்(ஏப்ரல் 1) அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் தேர்தல் பிரசாரங்களை முடித்துக் கொண்டு மதுரைக்கு வருகை தந்த பிரதமர் மோடி, மீனாட்சியம்மன் கோவிலில் முதல் முறையாக சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து இன்று(ஏப்ரல் 2) மதுரை, நாகர்கோவிலில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இதனை முடித்துக்கொண்டு கேரளாவுக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு பத்தனம்திட்டா மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்.

கேரளாவிலிருந்து புறப்பட்டு நாளை(ஏபர்ல் 3) அசாம் செல்லும் பிரதமர் மோடி அங்கு தமுல்பூரில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். அங்கிருந்து மேற்குவங்கம் சென்று தாரகேஷ்வர் மற்றும் சோனார்பூர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக இரு தினங்களில் பிரதமர் மோடி 5000 கிமீ தூரம் பயணித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் இதுவரை 20 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பரப்புரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்