நல்லா இருக்கீங்களா? மதுரையில் மாஸ் காட்டிய பிரதமர் மோடி!

நல்லா இருக்கீங்களா? மதுரையில் மாஸ் காட்டிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடி மதுரையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். 

அப்போது  பேசிய அவர்,நல்லா இருக்கீங்களா.. மதுரை வந்ததில் மிக்க மகிழ்ச்சி.. என்று  கூறி மதுரை பொதுக்கூட்டத்தில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி,தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன என்றும் உலகத்தின் தொன்மை மொழியான தமிழை, சங்கம் வைத்து வளர்த்தது மதுரை. மறைந்த தென் மாவட்ட தலைவர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன் என்றும் பேசினார் .

மேலும் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த மதுரை வீரன் படத்தை யாராலும் மறக்க முடியாது என்றும் தெரிவித்தார்.அனைத்து கிராமங்களுக்கும் இணையதள சேவை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும்  தமிழகத்துக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஜவுளி பூங்கா வர உள்ளது. நாடு முழுவதும் வைபை சேவை விரைவில் அளிக்கப்படும் என்றும்  கூறினார்.

மதுரையில் மிக விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை சரியான முறையில் கட்டப்படும் என்றும் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்று பாஜக தான் நினைத்தது  என்றும் காங்கிரஸ்-திமுக அல்ல என்றும் கூறினார் .மேலும் திமுக மற்றும் காங்கிரசார் தமிழகத்தின் பாதுகாவலர்கள் போன்று தங்களை சித்தரித்துக் கொள்கிறார்கள் ஆனால் அது உண்மையல்ல என்றும் கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்