ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது - திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை- மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே திமுக வேட்பாளர் எ.வ . வேலுவுக்கு செந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.
வரும் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்க ஏதுவாக வருமான வரித்துறையினர் பல இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த வருமான வரித்துறையினர் சோதனை குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசுகையில், ”ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது; ரெய்டுக்கு எல்லாம் பயந்து இருந்தால் என்றைக்கோ திமுக செத்து போய் புல் முளைத்திருக்கும்” என்று தெரிவித்தார்.
அத்துடன் இது தொடர்பாக இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தெரிவித்தார்.
Pollsகருத்துக் கணிப்பு

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
-
ராஜஸ்தான் ராயல்ஸ்
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

தேர்தல் காத்தவராயன்கள் - அரசியல் காமெடி
