மு.க. ஸ்டாலினுக்கு பொய் பேசுவதற்கான நோபல் பரிசு: முதல்வர் பழனிசாமி.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் குன்னூரில் பரப்புரை மேற்கொள்வதற்காக ஹெலிகாப்டரில் சென்ற முதல்வர் பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய முதல்வர், "பிறரை களங்கப்படுத்தி மகிழ்ச்சி காணும் கட்சி திமுக தான் என குற்றம் சாட்டினார். திட்டமிட்டு பொய் செய்தியை பரப்பி திமுகவினர் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள். சிறிது நேரம் திமுகவினரிடம் பேசினால் பொய் பேசியே மனதை மாற்றி விடுவார்கள். பொய் பேசுவதற்கான மு.க. ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்" என தெரிவித்தார்.
Pollsகருத்துக் கணிப்பு

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
-
ராஜஸ்தான் ராயல்ஸ்
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

தேர்தல் காத்தவராயன்கள் - அரசியல் காமெடி
