மேற்கு வங்கத் தேர்தல்: பாஜக 100 அடித்தால், என் தொழிலை விட்டு விடுகிறேன் – பிரசாந்த் கிஷோர்!

மேற்கு வங்கத் தேர்தல்: பாஜக 100 அடித்தால், என் தொழிலை விட்டு விடுகிறேன் – பிரசாந்த் கிஷோர்!

மேற்குவங்கத்தில் பா.ஜ.க 100 இடங்களுக்கும் மேல் வென்றால் நான் என் தொழிலையே விட்டு விடுகிறேன் என பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்(பி.கே) தெரிவித்துள்ளார். 

மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸிற்கும், தமிழகத்தில் திமுகவிற்கும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருபவர், பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். இவரின் ஐ-பேக் நிறுவனம் பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. பிரசாந்த் கிஷோரோ தற்போது பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பி.கே பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “மேற்குவங்கத்தில் பா.ஜ.க 100 இடங்களுக்கும் மேல் வென்றால் நான் என் தொழிலையே விட்டு விடுகிறேன். ஐ-பேக்கையே விட்டு விடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ”உத்தர பிரதேசத்தில் நாங்கள் என்ன செய்ய விரும்பினோமோ அதைச் செய்ய முடியவில்லை, அதனாலே எங்கள் வியூகம் அங்கு தோற்றது.  ஆனால் மேற்கு வங்கத்தில் மமதா, எங்களுக்கு நிறைய சுதந்திரம் அளித்துள்ளார். பா.ஜ.க போடும் சில கூட்டங்களில் 200-300 பேர் கூட தேறுவதில்லை, மோடி கூட்டத்துக்கு மட்டும்தான் கூட்டம் வருகிறது. நிறைய பேர் திரிணமூல் காங்கிரஸிலிருந்து பா.ஜ.க.வுக்குத் தாவுவதும், மற்ற கட்சி தலைவர்களிடம் ஆசைவலை விரிப்பது பா.ஜ.க.வின் உத்தி. பணம், டிக்கெட், பதவி, அதனால் வெளியேறுபவர்கள் குறித்து எந்த ஆச்சரியமும் இல்லை” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்