சீரியலில் இருந்து விலகிய ராதிகா… எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா?

சீரியலில் இருந்து விலகிய ராதிகா… எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா?

வேளச்சேரி தொகுதியில், சமத்துவ மக்கள் கட்சி சார்பில், ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று அந்த கட்சி துணைப் பொதுச் செயலாளர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார். 

 அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிப்பதற்காக தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் சரத்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் விவேகானந்தன், ராதிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய துணைப் பொதுச் செயலாளர் விவேகானந்தன், எம்ஆர் ராதா பற்றி குறிப்பிட்டார். அப்போது வரும் சட்டசபை தேர்தலில் ராதிகா, வேளச்சேரியில் போட்டியிடும் போது மிகப்பெரிய ஆதரவை தர வேண்டும் என்று தெரிவித்தார்.

 பொதுக்குழு கூட்டத்தில் இது பற்றிய முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் துணை பொது செயலாளர் விவேகானந்தன் பொதுமேடையில் இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

தென் சென்னை பகுதியில் உள்ளது வேளச்சேரி தொகுதி. இங்கு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மக்களில் பலர் கணிசமாக வசிக்கிறார்கள். இவர்களது வாக்குகள் சரத்குமாருக்காக ராதிகாவுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது தவிர, ஒரு நடிகையாக, ராதிகா சரத்குமாரின் தனிப்பட்ட செல்வாக்கால் கிடைக்கும் வாக்குகள் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்