பாஜக சார்பில் நடிகை கௌதமி போட்டி: சர்ச்சையான இணைப் பொறுப்பாளரின் அறிவிப்பு!

பாஜக சார்பில் நடிகை கௌதமி போட்டி: சர்ச்சையான இணைப் பொறுப்பாளரின் அறிவிப்பு!

ராஜபாளையத்தில் நடிகை கௌதமி தான் வேட்பாளர் என தமிழக பாஜக தேர்தல் இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியதால், கூட்டணி கட்சியினர் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதால்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில், பாரதிய ஜனதா கட்சியின் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி மேலிடத் தேர்தல் இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் பாஜக தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுதாகர் ரெட்டியை மலர்மாலை அணிவித்து, பாஜக இராஜபாளையம் சட்டமன்ற பொறுப்பாளர் கெளதமி வரவேற்றார். உடன் பாஜக நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவை சேர்ந்த இவர், ராஜபாளையத்தில் நடிகை கௌதமி தான் வேட்பாளர் என தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து சுதாகர் ரெட்டி பேசுகையில், “இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை கௌதமி வெற்றிபெற வாழ்த்துக்கள். அனைவரும் அதற்காக பாடுபட வேண்டும்” என பேசினார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது, வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேட்பாளராக நடிகை கெளதமியை நாங்கள் முடிவு எடுத்துள்ளோம். கூட்டணி கட்சிகளுடன் முறையான விதிமுறைகளை அனுசரித்து பேச்சுவார்த்தை நடைபெறும். இறுதி முடிவு எந்த நிலைபாட்டிலும் வெளியாகலாம்” என்று கூறினார்.

தேர்தல் அறிவித்த நிலையில், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு செய்யப்படாத நிலையில், வேட்பாளர் என அறிவித்து பேசியது கூட்டணி கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் எக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்