மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார் பழ.கருப்பையா!!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார் பழ.கருப்பையா!!
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., பழ.கருப்பையா கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல் ஹாசன், 
கல்லுக்கடை மறியல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்காக போராடி சிறைக்குச் சென்றவர் பழ.கருப்பையா என்று புகழாரம் சூட்டினார்.

மக்கள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து இந்த சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், மக்கள் நீதி மய்யத்தின் வெற்றி வேட்பாளராக முன்னாள் எம்.எ.ஏ., பழ. கருப்பையா போட்டியிடவுள்ளதாகக் கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்