ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை!!

ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை!!
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக ராகுல் காந்தி இன்று(பிப்ரவரி 27) தமிழகம் வருக்கிறார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார். முன்னதாக தமிழகத்தில் அவர் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இதனை தொடர்ந்து, தமிழகத்தில்  2-வது கட்டமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று(பிப்ரவரி 27) காலை தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகிறார் ராகுல் காந்தி. அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அங்கு இருந்து 
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடுகிறார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்