11வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதல்வர்!!

11வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதல்வர்!!
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை 
11வது முறையாக இன்று(பிப்ரவரி 22) சட்டசபையில் தாக்கல் செய்தார் ஓ.பன்னீர் செல்வம்.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 2-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில், 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று(பிப்ரவரி 23) மீண்டும் கூடியது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், தற்போது 3 மாத கால செலவினங்களுக்காக  இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சிக்காலத்தின் கடைசி பட்ஜெட் என்பதால் பல்வேறு சலுகை அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை  தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

2021-22ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும். மூலதன செலவினம் 14.41 சதவீதமாக உயர்ந்து ரூ.43,170.61 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

நல் ஆளுமை குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.கொரோனா காலத்திலும் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது.

தீயணைப்பு துறைக்கு 436 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நெடுஞ்சாலை துறைக்கு 18,750 கோடி ரூபாய், காவல் துறைக்கு 9,567 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 5000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில் 12000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதில் 2000 பேருந்துகள் மின்சார பேருந்துகளாக இருக்கும் என  பேசினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்