விருப்ப மனு பெறப்படும்: அ.தி.மு.கவை தொடர்ந்து பா.ம.கவும் அறிவிப்பு!

விருப்ப மனு பெறப்படும்: அ.தி.மு.கவை தொடர்ந்து பா.ம.கவும் அறிவிப்பு!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விருப்ப மனு பெறப்படும் என அதிமுக அறிவித்துள்ள நிலையில், தற்போது அதிமுக கூட்டணி கட்சியான பாமகவும் விருப்ப மனு பெறப்படும் என அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. அதனைமுன்னிட்டு தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

தி.மு.கவைப் பொறுத்தவரை டிசம்பர் மாதத்திலிருந்தே தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. தி.மு.க சார்பில், மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அ.தி.மு.கவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

இந்தநிலையில், கூட்டணி உறுதி செய்யப்படுவதற்கு முன்னரே அ.தி.மு.க சார்பில் பிப்ரவரி 24-ம் தேதி முதல் விருப்பமனு பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.கவைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியும் மார்ச் 21-ம் தேதி முதல் விருப்பமனு பெறப்படும் என்று அறிவித்தது.

இந்தநிலையில், பா.ம.க சார்பிலும் விருப்பமனு பெறப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பா.ம.க விடுத்துள்ள அறிவிப்பில், ”2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து பிப்ரவரி 23-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. சென்னை தியாகராயநகர் பர்கிட் சாலையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மண்டல அலுவலகத்தில் இவ்விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும்.

வரும் 23-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் 26-ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி வரை விருப்ப மனுக்களை மேற்கண்ட அலுவலகத்தில் பெற்று, நிரப்பி, உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்யலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.10,000, தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.5,000, அனைத்து தொகுதியிலும் போட்டியிட விரும்பும் பெண்கள் ரூ.5,000 வீதம் செலுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்