ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்!!

ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்!!
ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24-ந்தேதி விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்களை சசிகலா சந்திக்க உள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடிந்து  4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த சசிகலா விடுதலையாகி கடந்த 8-ந்தேதி சென்னை திரும்பினார்.

 அப்போது அவருக்கு வழிநெடுக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அன்றைய தினம் 23 மணி நேரம் காரில் பயணம் செய்து சென்னை வந்தடைந்த சசிகலா தி.நகரில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அவரது உருவப்படத்திற்கு சசிகலா வீட்டில் இருந்தபடியே மரியாதை செலுத்த உள்ளார். அதன் பிறகு அன்றைய தினம் விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார்.

மேலும், சென்னையில் கோவிலுக்கு செல்லவும் சசிகலா திட்டமிட்டுள்ளார். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்திருந்ததால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனால் டாக்டர்கள் எப்போது வெளியில் செல்லலாம் என்று சொல்கிறார்களோ அப்போது சசிகலா கோவிலுக்கு செல்வார். கட்சி நிர்வாகிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார், பத்திரிகை  நிருபர்களையும் சந்திப்பார் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்