ரஜினி- கமல் சந்திப்பு: திருமண நாள் வாழ்த்து தெரிவித்ததாக தகவல்!

ரஜினி- கமல் சந்திப்பு: திருமண நாள் வாழ்த்து தெரிவித்ததாக தகவல்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். 

தனி கட்சி ஆரம்பித்து, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என நடிகர் ரஜினிகாந்த்த கூறியிருந்தார். ஆனால் திடீரென அவரது உடல்நிலை நலிவடைந்ததால் கட்சி ஆரம்பிக்கும் பணியை கைவிட்டார். தனது அரசியல் முடிவு குறித்து பொது மக்கள் மற்றும் ரசிகர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்திருந்தார். 

இதனிடையே, ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும், ஆரம்பிக்கவில்லை என்றாலும் அவரிடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று(பிப்.20) ரஜினிகாந்தின் போயஸ்கார்டன் இல்லத்திற்கு வருகை தந்த கமல்ஹாசன் அவருடன் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். 

வரும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கமல், ரஜினியிடம் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடைபெற்றது.

 தொடர்ந்து, ரஜினி உடல் நலம் குறித்து விசாரித்ததோடு, லதா- ரஜினி தம்பதிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திருமண நாள் வாழ்த்து தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, அரசியல் பேசப்படவில்லை என ரஜினி தரப்பு வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் எந்த ஒரு கட்சிக்கும் இதுவரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்பதால் அவரது ஆதரவை பெறுவதற்கு பல கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்