கமல் - ரஜினி திடீர் சந்திப்பு!!

கமல் - ரஜினி திடீர் சந்திப்பு!!
சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை  போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 45 நிமிடங்கள் சந்தித்து பேசினார். 

சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,  ஹைதராபாத்திலிருந்து உடல்நிலை சரியில்லாமல் திரும்பிய நடிகர் ரஜினியை தான் சந்திப்பேன் என்றும் அவரது ஆதரவை கேட்பேன் என்றும் கூறினார்.

இதற்கிடையே கமல்ஹாசனுக்கும் கால் அறுவைசிகிச்சை செய்யப்பட்டதால் ஓய்வில் இருந்தார். தற்போது நடைபெற்ற இந்த சந்திப்பில் ஒருவரையொருவர் நலம் விசாரித்ததோடு அரசியல் குறித்தும் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்