மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்!!

திமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். முதலில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தி வந்த அவர், தற்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். தற்போது மதுரை, கோவை என 4 ஆம் கட்ட பரப்புரையை ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் பரப்புரை மேற்கொண்டு வரும் ஸ்டாலின் பொள்ளாச்சியில் இன்று(பிப்ரவரி 20) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ” கூட்டுறவு வங்கிகளில் மகளிர் வாங்கிய சுய உதவிக்குழு கடன்கள் திமுக ஆட்சிக்கு ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும்” என்றார். தொடர்ந்து பேசியுள்ள அவர், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.முன்னதாக திமுக ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து என ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை