”இதை நிரூபித்தால் பொது வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்ள தயார்’: அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசம்!

”இதை நிரூபித்தால் பொது வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்ள தயார்’: அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசம்!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தான் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்க்கையிலிருந்து விலகிக்கொள்ளத் தயார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

மதுரை சோலை அழகுபுரத்தில் அரசு சார்பில் 2 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பில், தாலிக்கு தங்கம், வீட்டு மனைப் பட்டா உள்ளிட்டவற்றை 644 பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளதாக மு.க.ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்தார். 

அப்போது, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடுகு அளவு கூட ஊழல் நடைபெறவில்லை. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தான் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்க்கையிலிருந்து விலகிக்கொள்ள தயார்” என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்