’ராகுலின் தமிழ் வணக்கம்’ : தென் மாவட்டங்களில் மூன்றாம் கட்டம்!

’ராகுலின் தமிழ் வணக்கம்’ : தென் மாவட்டங்களில் மூன்றாம் கட்டம்!

‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்று பிரசாரத்தை தொடங்கியுள்ள ராகுல காந்தி, , 3-ம் கட்டமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் ‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் கடந்த மாதம் பிரசாரத்தை தொடங்கினார். முதல்கட்டமாக கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் ‘ரோடு ஷோ’ மற்றும் கூட்டங்களில் பேசி காங்கிரசுக்கு ஆதரவு திரட்டினார்.

இரண்டாம் கட்டமாக சில தினங்களுக்கு முன்பு புதுவை மாநிலம் சென்று பிரசாரம் செய்தார்.

இந்நிலையில், 3-ம் கட்டமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். 

டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று பின்னர் விருதுநகரில் இருந்து அவர் பிரசாரத்தை தொடங்குவதாக இருந்தது. ஆனால் பயண தூரம் அதிகமாக இருப்பதால் இந்த சுற்றுப்பயணத்தில் விருதுநகர் மாவட்டம் தவிர்க்கப்பட்டுள்ளது.

வருகிற 27-ந் தேதி காலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார். அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். மறுநாள் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

மார்ச் 1-ந்தேதி கன்னியாகுமரி செல்கிறார். அங்கு பிரசாரத்தை முடித்துவிட்டு திருவனந்தபுரம் வழியாக டெல்லி திரும்புகிறார்.

ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் 4 மாவட்டங்களிலும் இன்று(பிப்.19) தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ரோடு ஷோ, பொதுக்கூட்டம், பொதுமக்களுடனான சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களை அவர் ஆய்வு செய்ய உள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்