காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கவே தமிழிசையை அனுப்பியுள்ளனர் -கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!!

புதுச்சேரி அரசை கவிழ்க்கவே தமிழிசையை அனுப்பியுள்ளனர் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் இருந்து மதுரை செல்வதற்காக
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை செயல்படாமல் தடுக்க கிரண்பேடியை மோடி அனுப்பி இருந்தார். தற்போது காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க தமிழிசையை அனுப்பி உள்ளார்.இரு பெண்களை அனுப்பி வைத்து புதுச்சேரி அரசை சிதைக்கும் முயற்சியில் பாரதிய ஜனதா அரசு மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் நேரத்தில் கிரண்பேடி பதவி நீக்கம் என்ன காரணம்? அப்படியென்றால் கிரண்பேடி தவறு செய்தார் என ஒத்துக்கொள்கிறார்களா?. புதுவை மக்கள் கிரண்பேடிக்கு எதிராக திரண்டெழுந்துள்ளார்கள் என்பதால் மக்களின் கோபத்தை கட்டுப்படுத்தவே தமிழிசையை நியமித்துள்ளார்கள். பாஜக அரசு, புதுச்சேரியில் அரசின் உயிர் நாடியை அழிக்க நினைக்கிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை