மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் பிக்பாஸ் பிரபலம்!!

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் பிக்பாஸ் பிரபலம்!!
பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த பிக்பாஸ் பிரபலம் நடிகை ஓவியா மீண்டும் இரண்டு ஹாஷ்டேக்கை பதிவிட்டு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14-ம் தேதி சென்னைக்கு வருகை தருவதை முன்னிட்டு பிப்ரவரி 13-ம் தேதி ஓவியா கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக்கைப் பதிவிட்டார். அவருடைய ஹேஷ்டேக் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே, கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து மோடி தமிழகம் வருகை தரும்போதேல்லாம் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டெக் ட்ரெண்ட் செய்யப்பட்டுவருகிறது. 

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக, ‘கோ பேக் மோடி’ என்று பதிவு செய்த நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை சிபிசிஐடி சைபர் க்ரைம் அலுவலகத்தில் பாஜ வழக்கறிஞர் அணி சார்பில் சிபிசிஐடியில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரில் கூறியதாவது: நடிகை ஓவியா பதிவு செய்ததற்கு உள்நோக்கம் இருக்கிறது. அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த மோடிக்கு எதிராக அவர் பதிவு செய்ய என்ன காரணம்? அதன் பின்னணி என்ன என்று விசாரணை நடத்த வேண்டும். இவரது டிவிட்டர் கணக்கையும் முடக்கி ஐபிசி 124(ஏ), 153(ஏ), 294 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஓவியா மீண்டும் ஒற்றை வார்த்தையில் மற்றொரு ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், ‘ஜெய்ஹிந்த், கருத்து சுதந்திரம்(freedomofthoughts)’ என்று பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்