திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய பிரபல நடிகர்!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய பிரபல நடிகர்!!
கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகன் சிபி ஆகியோர் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே, கோயம்புத்தூர் - ஈச்சனாரியில் நடைபெற்ற - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி அவர்களின் மகன் செல்வன். ஸ்ரீகார்த்திக் பழனிசாமி - செல்வி. ஸ்நேஹா மஹாலட்சுமி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அந்த வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகனும் நடிகருமான சிபி சத்யராஜ் ஆகியோர் பங்கேற்று உள்ளனர். அப்போது அவர்கள் ஸ்டாலினிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். 

நடிகர் சத்யராஜ் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில்,  நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகனும் நடிகருமான சிபி சத்யராஜ் ஆகியோர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மிக நெருக்கமாக பேசியது அரசியலில்  வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்