சசிகலா விடுதலையைக் கொண்டாடும் விதமாக ஜெ. நினைவிடம் திறப்பு: தினகரன் பேட்டி!!

சசிகலா விடுதலையைக் கொண்டாடும் விதமாக தமிழகத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகளாக கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலா இன்று (ஜனவரி 27) விடுதலை
செய்யப்பட்டார்.
அவரைக் காண டி.டி.வி தினகரன் பெங்களூர் சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும்.
நிர்வாகிகள், தொண்டர்கள் சசிகலா வருகைக்காக காத்திருக்கின்றனர். அவரது வரவேற்பு தமிழகத்தில் சிறப்பானதாக இருக்கும் என்று கூறினார்.
மேலும்,சசிகலா விடுதலையைக் கொண்டாடும் விதமாக தமிழகத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை