பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை: பிரேமலதா விஜயகாந்த்.

தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்ததாவது, "2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. அதே தொகுதிகளை வரும் சட்டமன்ற தேர்தலிலும் எதிர்பார்க்கிறோம். எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை. அதிமுகவினரால் முதல்வராக தேர்வானவர். ஒரு பெண்ணாக சசிகலாவிற்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இருந்து அனைத்தையும் செய்தவர் சசிகலா. அவர் அரசியலுக்கு வருவது தவறில்லை என்பது என்னுடைய கருத்து" என்று கூறினார்.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை