"தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்த ரூ.621 கோடி தேவை" - சத்ய பிரதா சாகு!!

"தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்த ரூ.621 கோடி தேவை" என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தற்போதே  அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளனர்.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்த ரூ.621 கோடி தேவை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக தமிழக அரசிடம் நிதி கேட்டுள்ளோம் என்றும் கொரோனா காலம் என்பதால் செலவு தொகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
    28.45%
  • அனுபவக் குறைவு
    24.43%
  • கிரிக்கெட் அரசியல்
    35.6%
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
    11.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்